கோயில் கருவறையில் சூரியஒளி: ஆண்டுக்கு 3 நாள் விழும் அதிசயம்!

040c4a94-5976-4a08-979d-f4b138c73cd0HiResவத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு சங்கிலிமாடசாமி கோயில் கருவறையில் உள்ள சிவலிங்கம் மீது ஆண்டுக்கு 3நாட்கள் சூரியஒளி விழும் அதிசயம் நேற்று நடந்தது. இக்கோயில் வாசல் வழியாக வரும் சூரியஒளி முன் மண்டபத்தோடு நின்றுவிடும். ஆண்டிற்கு மூன்றுநாள் மட்டும் அதாவது பிப்ரவரி 26,27,28 தேதிகளில் வாசலில் 20 அடி உயரத்திற்கு மேல் அமைக்கப்பட்டுள்ள கோயில் ஆர்ச் சிற்பங்கள் நடுவே தோன்றி கருவறையில் உள்ள சொக்கநாத சுவாமி மீது 3 நிமிடங்கள் விழும். கோயில் பூஜாரி சாமிமலை கூறுகையில், ‘ சுவாமி மீது சூரியஒளி விழும் அதிசயம் ஒருநாள்கூட முந்துவதோ, பிந்துவதோ இல்லை. ஆங்கில தேதி அடிப்படையில் சரியாக விழுகிறது,” என்றார்.

nag_linga

Leave a Reply