கோவில் நிலங்களில் பல கோடி ஊழல்: டாப் 10 பட்டியல் தயார்!

LRG_20150907103719906899

கோவில் நிலங்களை ஆக்கிரமித்து, பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்த, இந்து சமய அறநிலையத் துறையின் முதல், 10 அதிகாரிகள், உடந்தையாக இருந்த, 10 அரசியல்வாதிகள் பெயர் பட்டியல் நவம்பரில் வெளியிடப்படும் என, அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. சிவனடியார் மற்றும் திருத்தொண்டர் சபை நிறுவனர் தலைவர் ராதாகிருஷ்ணன், கூட்டமைப்பு தலைவர் ராமநாதன், செயலர் சரவணக்குமார், இணை செயலர் கணேசன் கூறியதாவது: இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி கள் உதவியுடன், பல ஆயிரம் கோடி மதிப்பில், 20 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் கோவில் நிலங்கள், சொத்துகள் மீட்கப்பட்டு உள்ளன. தென் மாவட்டங்களில் ஒரு லட்சம் ஏக்கர் கோவில் நிலங்கள் இன்னும் ஆக்கிரமிப்பில் உள்ளன. இத்தகவல் அனைத்து மக்களையும் சென்றடை யும் வகையில் www.allsivanadiyars.com என்ற இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. நிலங்கள் ஆக்கிரமிப்பில் ஊழல் செய்த அறநிலையத் துறையின் முதல், 10 அதிகாரிகள், 10 தொழிலதிபர்கள், அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு லஞ்சம் பெற்ற, 10 அரசியல்வாதிகள் பெயர் விவரத்தை நவம்பரில் வெளியிட உள்ளோம். கூட்டமைப்பு சார்பில், அனைத்து மாவட்டங்களிலும் அரசு போட்டித் தேர்வு இலவச பயிற்சி மையங்கள் விரைவில் ஏற்படுத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply