சுப்பிரமணியபுரம், நாடோடி, குட்டிப்புலி, சுந்தரபாண்டியன் போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்த சசிகுமார் தற்போது தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் “தாரை தப்பட்டடை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சண்டைக்காட்சி படப்பிடிப்பில் காயமடைந்ததால் தற்போது ஓய்வில் இருக்கும் சசிகுமார், அடுத்த படத்திற்கான கதையை கேட்டு வருகிறார்.
இந்நிலையில் ‘ஜில்லா’ படத்தில் இயக்குனர் நேசனின் உதவியாளராக இருந்த நேசமணி என்பவர் கூறிய கதை ஒன்று சசிகுமாரை பெரிதும் கவர்ந்ததால் ‘தாரை தப்பட்டையை முடித்துவிட்டு அவருடைய இயக்கத்தில் ஒரு படம் நடிக்க முடிவு செய்துள்ளார். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா நாயர் நடிக்கவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இவர் குக்கூ படத்தின் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை கோயம்பேடு ரோகிணி திரையரங்கு உரிமையாளர்கள் தயாரிக்கிறார்கள். மேலும் சசிகுமாரின் காயமும் குணமாகி வருகிறது. விரைவில் ‘தாரை தப்பட்டை’ படத்தின் சண்டைக்காட்சிகளில் தொடர்ந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.