கோயம்பேடு காய்கறி சந்தை இன்று வழக்கம் போல் இயங்குமா? வியாபாரிகள் தகவல்
கொரோனா வைரஸ் தொற்று பொதுமக்களிடையே பரவாமல் இருப்பதற்காக சென்னை காஞ்சிபுரம் ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்கள் உள்பட இந்தியாவில் 75 மாவட்டங்களில் முடக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சென்னையில் அனைத்து கடைகளும் மூடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது கோயம்பேடு காய்கறி மார்க்கெட் இன்று வழக்கம்போல் இயங்கும் என கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்
வெளியூரில் இருந்து லாரிகள் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதால் காய்கறிகள் வரத்து வரத்தொடங்கி இருப்பதாகவும் எனவே இன்று வழக்கம் போல் காய்கறி மார்க்கெட் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இருப்பினும் எப்போது வேண்டுமானாலும் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மூடப்படும் என்ற எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் காய்கறிகளை அதிக அளவில் வாங்கி வைத்துக் கொண்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது