நேபாளத்தின் புதிய பிரதமர் தேர்வு. உலகத்தலைவர்கள் வாழ்த்து.
நேபாளம் நாட்டில் புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டதால் பிரதமராக இருந்த சுஷில் கொய்ராலா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதை அடுத்து புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பில் ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கே.பி. சர்மா ஒலி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால், அவர் நேபாளத்தின் அடுத்த பிரதமராக விரைவில் பதவியேற்கவுள்ளார்.
நேற்று நேபாள பாராளுமன்றத்தில் புதிய பிரதமர் பதவிக்கு நடந்த வாக்கெடுப்பில் ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கே.பி. சர்மா ஒளி அவர்களுக்கும் தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலாக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இதில் பெருன்பான்மை வாக்குகள் பெற்று ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கே.பி. சர்மா ஒலி அந்நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்ட சர்மா ஒலிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்பட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.