பொதுமக்கள் பாராட்டு
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளார்கள்
ஊரடங்கு உத்தரவு காரணமாக போக்குவரத்து இல்லாததாலும் மருத்துவமனையில் கொரோனா தவிர பிற நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்து வருவதாகவும் பொதுமக்கள் பெரும் சிக்கலில் உள்ளனர்
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் இதற்கு ஒரு தீர்வு கண்டுள்ளது. அரசு பேருந்தை தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று அங்குள்ள மக்களின் உடல்நிலைக்கு சிகிச்சை அளித்து வருகிறது
முதல் கட்டமாக மங்களூரில் நடமாடும் மருத்துவமனை சென்றதாகவும், இந்த நடமாடும் பேருந்துக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. விரைவில் நடமாடும் பேருந்துகள் அதிகரிக்கப்படும் என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்