குடத்தால் பிறந்த நகரம்!

5

ஒருமுறை தண்ணீரால் உலகம் அழியும் நாள் வந்தது. இதையறிந்த பிரம்மா, தனது படைப்புக் கருவிகளை சிவனிடம் ஒப்படைத்தார். சிவன் அவற்றை, அமிர்தம் நிறைந்த ஒரு கும்பத்தில் வைத்து தண்ணீரில் மிதக்க விட்டும்படி கூறினார். அமிர்தத்தில் வைக்கும் பொருட்கள் எந்தச்சூழலிலும் அழியாது. அதன்படி, பிரம்மாவும் செய்ய அமிர்த கலசம் கும்பகோணத்தை வந்தடைந்தது. அங்கு வேடன் வடிவில் வந்த சிவன், ஒரு அம்பைத் தொடுத்து குடத்தில் துளையிட்டார். துளை(கோணம் அல்லது மூக்கு) வழியாக அமிர்தம் சிந்தியது. அந்த அமிர்தம் பெருகி குளமாகத் தேங்கியது. அதுவே மகாமகக் குளம் ஆனது, இந்த நிகழ்வு மாசிமகத்தன்று நிகழ்ந்தது. எனவே, பக்தர்கள் குளத்தில் நீராடி முக்திக்கு (பிறப்பற்ற நிலை) வித்திடுகிறார்கள்

Leave a Reply