காவிரி விவகாரம்: ரஜினி கருத்தை ஏற்க மறுத்த குமாரசாமி
நாளை மறுநாள் கர்நாடக முதல்வராக பதவியேற்கவுள்ள மதச்சார்பற்ற கட்சியின் குமாரசாமி, காவிரி விவகாரம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்தை ஏற்க மறுத்துவிட்டார்.
நேற்று ரஜினி மக்கள் மன்றத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், ‘சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளவாறு கர்நாடகத்தில் புதிதாக அமையவுள்ள அரசு காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்துவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஆனால் கர்நாடக மாநிலத்தில் தேவையான தண்ணீர் இருந்தால் தமிழகத்துக்கு தரமுடியும் என்றூம் ரஜினிகாந்த் கர்நாடகத்துக்கு வந்து இங்குள்ள அணைகளை பார்க்க வேண்டும் என்றும் எங்கள் விவசாயிகளின் நிலைமைகளை காண வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். மேலும் ஆனால், இங்கு வந்து அணைகளை பார்வையிட்டால் அவர் தனது நிலையை மாற்றிக் கொள்வார் என நினைப்பதாகவும், அதற்கு பிறகும் ரஜினிகாந்த் தமிழகத்துக்கு தண்ணீர் தரவேண்டும் என கேட்டால் அதுதொடர்பாக பேசலாம் என்றும் குமாரசாமி தெரிவித்தார்