குன்றத்தூர் முருகன் கோவில் பளீச்!

LRG_20150606114441824702

குன்றத்துார்:நமது நாளிதழின் செய்தி எதிரொலியாக, குன்றத்துார் முருகன் கோவிலின் சுற்றுப்புற பகுதி சுத்தம் செய்யப்பட்டது. கடைகளில், பிளாஸ்டிக் பை விற்கவும் தடை செய்யப்பட்டு உள்ளது.குன்றத்துாரில், மலையின் மேற்பகுதியில் சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. சிறப்புமிக்க இக்கோவிலின் சுற்றுப்புற பகுதி, பராமரிப்பின்றி மோசமாக இருந்தது. பிளாஸ்டிக் குப்பை, பக்தர்கள் சாப்பிடும் இலை, உணவு பொருட்கள், குப்பை ஆங்காங்கே கொட்டப்பட்டிருந்தன. காணிக்கை முடி, கழிப்பறையின் பின் புறத்தில் கொட்டி வைக்கப்பட்டது.

இதுகுறித்து, வெளியான செய்தியை அடுத்து, கோவிலின் சுற்றுப்புற பகுதியில் தேங்கிய பிளாஸ்டிக், குப்பை, உணவு கழிவுப் பொருட்களை, பேரூராட்சி நிர்வாகத்தினர் நேற்று சுத்தம் செய்தனர். பின், பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. பிளாஸ்டிக் தேங்குவதை தடுக்க, கோவிலின் கீழ்பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் விற்பனை செய்வதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளதோடு, அது சம்பந்தமான அறிவிப்பு பலகை வைக்கவும் திட்டமிட்டு உள்ளது.

Leave a Reply