மயிலாப்பூர் தொகுதியில் குஷ்பு போட்டியா? அவரே அளித்த விளக்கம்.

மயிலாப்பூர் தொகுதியில் குஷ்பு போட்டியா? அவரே அளித்த விளக்கம்.

kushbooசென்னை சத்யமூர்த்தி பவனில் நேற்று காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு ஆகியோர் கூட்டாக பேட்டியளித்தனர்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியபோது, ‘இன்னும் இரண்டு நாட்களில் திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும், விஜயகாந்த் ஏன் எங்கள் கூட்டணிக்கு வரவில்லை என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது என்றும் கூறினார்.

மேலும் மக்கள் நலக்கூட்டணிக்கு இரண்டு சதவீத வாக்குகள் இல்லை என்பதால் அந்த கட்சியை உடைக்க வேண்டிய அவசியமே இல்லை என்றார்.

இந்நிலையில் குஷ்பு கூறியபோது, “சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட நான் எந்த தொகுதிக்கும் மனு கொடுக்கவில்லை. அப்படி இருக்கும்போது, மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியானது எப்படி என்று எனக்கு தெரியவில்லை. இது வெறும் வதந்தி. இது பற்றி நான் ஏதாவது சொன்னால், வதந்திகளுக்கு தீனி போட்டது போலவே ஆகும். இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும் என்று கூறினார்.

இந்நிலையில் குஷ்புவின் விளம்பரங்கள் தொலைக்காட்சியில் வெளியாக தடை விதிக்க வேண்டும் என்று ‘மக்கள் மாநாடு கட்சி’ தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு கொடுத்துள்ளது. அந்த மனுவில், “காங்கிரஸ் கட்சியில் செய்தித் தொடர்பாளராக பொறுப்பில் இருக்கிறவர் நடிகை குஷ்பு. இவர் சில தனியார் நிறுவன விளம்பரங்களில் நடித்துள்ளார். அது பிரதானமான பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது, இது அப்பட்டமான தேர்தல் விதி மீறல் குற்றமாகும். இதற்காக நடிகை குஷ்பு மீதும், விளம்பரத்தை வைத்துள்ள அந்த தனியார் நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Leave a Reply