ஸ்பெயின் கார் ரேஸ். வேடிக்கை பார்த்த கர்ப்பிணி பெண் உள்பட 6 பேர் பலி

ஸ்பெயின் கார் ரேஸ். வேடிக்கை பார்த்த கர்ப்பிணி பெண் உள்பட 6 பேர் பலி
[carousel ids=”71219,71220,71221,71222,71223,71224,71225,71226″] ஸ்பெயின் நாட்டில் நேற்று நடைபெற்ற கார் ரேஸ் ஒன்றில் பங்கேற்ற கார் ஒன்று திடீரென போட்டியாளரின் கட்டுப்பாட்டை இழந்து சீறிப்பாய்ந்து ஒன்று சாலையோரமாக நின்றிருந்த கூட்டத்துக்குள் ஒரு கர்ப்பிணிப் பெண் உள்பட ஆறு பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்து அந்த பகுதியில் உள்ளவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

ஸ்பெயின் நாட்டில் உள்ள வடமேற்கு பகுதியில் உள்ள கரால் பகுதியில் நேற்று ‘லா கோருனா’ என்ற கார் ரேஸ் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பல கார்கள் சாலையில் படுவேகமாக சீறிப் பாய்ந்து சென்று கொண்டிருந்தன. விறுவிறுப்பாக நடைபெற்ற  இந்த கார் ரேசை சாலையின் இருபுறங்களிலும் நின்று ஆயிரக்கணக்கான மக்கள் ஆவலுடன் பார்த்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் குறுகலான வளைவு ஒன்றில் கார்கள் ஒன்றையொன்று முந்திச் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென போட்டியாளரின் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக நின்றிருந்த மக்கள் கூட்டத்திற்குள் பாய்ந்தது. கார் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட ஒரு கர்ப்பிணிப் பெண் உள்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

படுகாயம் அடைந்த 15க்கும் மேற்பட்டோர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்டனர். இந்த துயர சம்பவத்துக்கு ஸ்பெயின் பிரதமர் மரியானோ ராஜாய் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/watch?v=n6xYeyMOT1w

Leave a Reply