பெண் நிருபரை கட்டி தழுவியதாக கனடா பிரதமர் மீது வழக்கு
கனடா பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ பொதுமக்களிடம் கடந்த சில ஆண்டுகளாக நல்ல பெயரை வாங்கி வருகிறார். இந்த நிலையில் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு இவர் தன்னை கட்டி தழுவியதாக பெண் நிருபர் குற்றம் சாட்டியுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2000-ம் ஆண்டில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கிரஸ்டன் நகரில் இசை திருவிழா நடந்தபோது, அப்போது 28 வயதான ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டதாகவும், அந்த சமயத்தில் பெண் நிருபர் ஒருவரை ஐஸ்டின் கட்டித் தழுவி தவறான எண்ணத்துடன் ஈடுபட்டதாகவும் அந்த பெண் தற்போது புகார் கூறியுள்ளார்.
ஆனால் இந்த புகாரை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, நான் தவறான எண்ணத்துடன் ஈடுபடவில்லை. அந்த சம்பவம் எனக்கு நன்றாக நினைவு உள்ளது. கிரஸ்டன் நகரில் பனிப்பாறை பாதுகாப்பு அறக்கட்டளை நடத்திய இசை விழாவில் கலந்து கொண்டேன். அப்போது இத்தகைய சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்று கூறியுள்ளார்.