சீனியர் நடிகையுடன் சீரியஸாக விவாதம் செய்த சிம்பு
கோலிவுட் திரையுலகில் அம்மா வேடத்தில் நடித்து வருவதுடன் தனது மனதில் தோன்றி கருத்தை தைரியமாக வெளியிடும் துணிச்சலான நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். அதேபோல் ஒளிவு மறைவின்றி தைரியமாக தனது கருத்துக்களை வெளியே சொல்வதிலும், பிரச்சனை என்று ஒன்று வந்தால் அதை தைரியமாக சந்திக்கும் திறமையும் உள்ள நடிகர் சிம்பு
இந்த நிலையில் லட்சுமிராமகிருஷ்ணனும், சிம்புவும் சமீபத்தில் சீரியஸாக ஒரு விஷயத்தை தொலைபேசியில் விவாதம் செய்துள்ளனர். இதுகுறித்து தனது டுவிட்டரில் தெரிவித்த லட்சுமிராமகிருஷ்ணன், ”சிம்பு எனக்கு போன் செய்திருந்தார். இரண்டு பேருமே எங்களுடைய கருத்தை பரிமாறிக் கொண்டோம். பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு குரல் கொடுக்குமாறு நான் அவரிடம் கேட்டுக் கொண்டேன். தன்னை ஒரு பெரிய ஸ்டாராக காட்டிக் கொள்ளாமல் என்னிடம் அவர் பேசினார்’ என்று கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் சிம்பு நடித்து வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்திருந்த லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது திடீரென சிம்புவுடன் இணக்கமாக பேசியுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.