நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில், ஆனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, நேற்று, கருட சேவை நடைபெற்றது. பேரம்பாக்கம் அடுத்த, நரசிங்கபுரத்தில் உள்ள, லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில், ஆனி பிரம்மோற்சவ திருவிழா, கடந்த, 8ம் தேதி கொடிஏற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு, காலை, 5:30 மணிக்கு, நரசிம்ம பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரத்துடன் நடந்தது. காலை, 6:30 மணிக்கு, கருட வாகனத்தில், நரசிம்ம பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி எழுந்தருளி, வீதியுலா வந்தார். அதன்பின், மாலை 7:00 மணிக்கு ஆண்டாள் சன்னிதியில் ஊஞ்சல் சேவையும் நடந்தது.