பிரபல நடிகையின் ஹவுஸ் ஓனராக மாறிய லட்சுமி ராமகிருஷ்ணன்

பிரபல நடிகையின் ஹவுஸ் ஓனராக மாறிய லட்சுமி ராமகிருஷ்ணன்

குணசித்திர நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது அடுத்த படத்திற்கான பணியை தொடங்கிவிட்டார்.

சென்னை மக்களின் கனவான சொந்த வீடு குறித்துதான் அவருடைய அடுத்த படம். இந்த படத்திற்கு ‘ஹவுஸ் ஓனர்’ என்றே டைட்டிலும் வைத்துள்ளார். இந்த படத்தில் அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் கணவன், மனைவியாக நடிக்கின்றனர்.

அசோக் செல்வன் – ஐஸ்வர்யா தம்பதியினர் சென்னையில் சொந்த வீடு வாங்க முயற்சிப்பதாகவும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளை சந்திப்பதுமே இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் தொடங்கவுள்ளது.

Leave a Reply