பெரிய மோடிக்கு சிறிய மோடி உதவி செய்கிறார். லலித்மோடி-ப்ரியங்கா சந்திப்பு குறித்து காங்கிரஸ்

பெரிய மோடிக்கு சிறிய மோடி உதவி செய்கிறார். லலித்மோடி-ப்ரியங்கா சந்திப்பு குறித்து காங்கிரஸ்

Lalit-Modi-Narendra-Modiஐ.பி.எல் ஊழல் மன்னன் லலித் மோடிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாஸ்வராஜ் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் உதவிய விவகாரத்தை திசை திருப்பவே, லலித்மோடியுடன் ப்ரியங்கா காந்தி சந்தித்ததாக கட்டுக்கதையை பாஜகவினர் அவிழ்த்து விடுகின்றனர் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

சுஷ்மா ஸ்வராஜ்-வசுந்தரா ராஜே-லலித் மோடி விவகாரம் தற்போது உச்சகட்டத்தில் இருந்து வரும் நிலையில் லண்டனில் பிரியங்கா காந்தியையும், ராபர்ட் வதேராவையும் தனித்தனியாக சந்தித்ததாக ட்விட்டரில் லலித் மோடி பதிவு செய்துள்ளார்.,

உடனே இந்த விவகாரத்தை கையில் எடுத்த பாஜக, “இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

மேலும் பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா கூறியபோது, “இன்றைய தினத்தின் மிகப்பெரிய வெளிப்பாடு என்னவெனில் லலித் மோடி, காந்தி குடும்பத்தினரைச் சந்தித்துள்ளார். நேற்றுதான் ராபர்ட் வதேராவையும் பிரியங்காவையும் சந்தித்துள்ளார், அவரை ஏன் இவர்கள் சந்திக்க வேண்டும்?

இந்த விவகாரமே லலித் மோடிக்கும்-காந்தி குடும்பத்தினருக்கும் தொடர்புடையதாகும். ஏன் இத்தனையாண்டுகளாக லலித் மோடியுடன் தொடர்பில் காந்தி குடும்பத்தினர் இருக்க வேண்டும் என்பதை சோனியா காந்தி விளக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுஜ்ரேவாலா, “லலித் மோடியுடன், பிரியங்காவோ, ராபர்ட் வதேராவோ உரையாடவில்லை என்பதை நான் முழுப் பொறுப்புடன் கூற முடியும். உணவு விடுதியில் ஒருவரை சந்திப்பது பெரிய குற்றமல்ல. பொய்கள் மூலம் சிறிய மோடி, பெரிய மோடிக்கு உதவி புரிகிறார்.  பிரச்சினையை திசைதிருப்ப பாஜக செய்யும் முயற்சியே இது. உண்மையான விவகாரங்கள் குறித்து அரசு பேச வேண்டும் அதனை விடுத்து லலித் மோடி விவகாரத்தின் பின்னால் ஒளிந்து கொள்ளக்கூடாது” என்றார்.

Leave a Reply