3வது வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறை
மாட்டுத்தீவன ஊழலில் மட்டுமே பீகார் முன்னாள் முதல்வர் லாலு மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே இரு வழக்குகளின் தீர்ப்பு வெளிவந்துவிட்டது. இந்த நிலையில் இன்று வெளிவந்த மூன்றாவது வழக்கிலும் லாலு குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார்
இந்த நிலையில் சற்றுமுன் அவருக்கான தண்டனை அறிவிக்கப்பட்டது. இதன்படி லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஏற்கனவே லாலு மீதான முதல் 5 ஆண்டு சிறை தண்டனையும், 2வது வழக்கில் மூன்றரை ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் மூன்று வழக்குகள் இருப்பதால் அவர் தன் ஆயுள் முழுவதையும் சிறையில் தான் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.