வகை வகையான சுற்றுலா விளக்கு. ஒரு பார்வை

வகை வகையான சுற்றுலா விளக்கு. ஒரு பார்வை
lamp
பொதுவாக சுற்றுலா செல்லும் போது விளக்குகள் எடுத்துச் செல்ல முடிவதில்லை. ஆனால் இந்த விளக்கை எவ்வளவு உயரத்தில் உள்ள மலைகளுக்கும் எடுத்து செல்லலாம். மெல்லிய கயிறு போல் இது வடிவமைக்கப் பட்டுள்ளது. இதை ரிமோட் மூலம் இயக்க முடியும்.

ஸ்மார்ட் ஹெட்போன்

இந்த புதியவகை ஹெட்போன் மூலம் படம்பார்த்துக் கொண்டே இசையையும் கேட்க முடிகிறது. அதாவது. நமது கண்களோடு இந்தக் கருவியை பொருத்திக் கொள்ள வேண்டும். இந்த கருவியின் உள்ளே நமது ஸ்மார்ட்போனை வைத்து படங்களை பார்க்கும் போது தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவம் நமக்கு கிடைக்கிறது. 4 முதல் 5.5 அங்குலம் வரை டிஸ்பிளே அளவு இருக்கிறது. மேலும் இதன் வழியாக கேட்கும் பொழுது எந்த புறச் சத்தங்களும் நம்மை தொந்தரவு செய்யாத அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது

புதுவித சார்ஜர்

ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கான புதுவிதமாக தயாரிக்கப்பட்டுள்ள சார்ஜர். மேலும் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சுகளையும் இதன் மூலம் சார்ஜ் செய்து கொள்ள முடியும். மேக்னடிக் முறையில் சார்ஜ் ஏற்றிக் கொள்ளும்படி இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

வோலோகாப்டர்

இதுவரை ஹெலிகாப்டர் தான் கேள்விப்பட்டிருக்கிறோம். அதிகரிக்கும் வாகன நெரிசலை போக்க குறிப்பிட்ட உயரத்தில் பறக்குமாறு வோலோகாப்டரை வடிவமைத்துள்ளனர். இதுவும் ஹெலிகாப்டர் போன்றதுதான். பேட்டரி மூலம் இயங்குமாறு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 20 முதல் 30 நிமிடம் வரை பறக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு பேர் மட்டுமே பயணிக்க முடியும். இந்த வோலோகாப்டரின் மொத்த எடை 450 கிலோ. அதிகமாக 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

சிறிய ஸ்கூட்டர்

ஸ்கூட்டர் மாடலில் உள்ள இந்த வாகனத்தில் உட்கார்ந்து கொண்டே எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். நான்கு சக்கரம் மட்டும்தான் அடிப்படை மற்றபடி சேர், ஸ்டூல் போன்றவற்றை அதனுடன் இணைத்துக் கொள்ள முடியும்.

Leave a Reply