ஜெகன்மோகன் ரெட்டி சென்னையில் போரட்டம் நடத்த திட்டமிட்டது ஏன்?

ஜெகன்மோகன் ரெட்டி சென்னையில் போரட்டம் நடத்த திட்டமிட்டது ஏன்?

jegamohanஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஒருபக்கம் காங்கிரஸ் கட்சி சிம்மசொப்பனமாக இருந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் ஜெகன்மோகன் ரெட்டி அவருக்கு எதிராக பலவித போராட்டங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் மாமல்லபுரம் அருகே உள்ள ஆந்திர கோயிலுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்ததில் ஊழல் நடந்திருப்பதாகக்கூறி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு எதிராக, ஜெகன்மோகன் ரெட்டி சென்னையில் போராட்டம் நடத்த உள்ளார்.

சென்னையை அடுத்த, பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள சத்தியபாமா கல்லூரிக்கு பின்பு|றம் 89 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள புதிய தலைநகரமான அமராவதியின் நுழைவாயிலில் உள்ள அமிர்தலிங்கேஸ்வர சாமி கோயிலுடன் தொடர்புடைய சடாவர்த்தி சத்திரத்துக்கு சொந்தமான நிலம் ஆகும்.

ஆரம்ப காலத்தில் 690 ஏக்கராக இருந்த இந்த நிலம் படிப்படியாக சென்னை வி.ஐ.பி.கள் பலரும் இந்த நிலத்தை ஆக்கிரமித்து விட்டார்களாம். ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டுத்தரும்படி தமிழக அரசிடம், கடந்த 15 வருடங்களாக ஆந்திர மாநில அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தவண்ணம் இருக்கிறார்கள். அடிக்கடி சென்னைக்கு விசிட் செய்து, மனுகொடுத்துவிட்டுப் போவார்களாம்.

இந்த நிலையில், சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆந்திராவில் புது அமைச்சரவை பதவி ஏற்ற பின்னர் ஆக்கிரமிப்பு போக எஞ்சியிருந்த 89 ஏக்கர் நிலத்தை ஆந்திர அரசின் சார்பில் ஏலம் விட்டிருக்கிறார்கள். பல கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலத்தை, சில லட்சங்களுக்கு விலை போனதாக கூறப்படுகிறது. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி , ஆந்திராவில் இதுதொடர்பாக பிரஸ்மீட் நடத்தி, இந்த நிலம் ஏலம் விடப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் அந்த நிலத்தின் இன்றைய சந்தை மதிப்பு என்ன…? எவ்வளவு குறைவாக அந்த நிலம் விற்கப்பட்டிருக்கிறது? அரசுக்கு எவ்வளவு நஷ்டம்? பணம் பலன் அடைந்த வி.ஐ.பி.கள் யார் என்பதையெல்லாம் விசாரித்து அறிய சென்னைக்கு வர உள்ளார்.

நில விவகாரத்தின் முழு தகவல்களை சேகரித்துக்கொண்டு, அன்றைய தினமே சென்னையில் பத்திரிகையாளர்களை சந்திக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம் ஜெகன்மோகன் ரெட்டி. விரைவில் இதற்காக சென்னையில் போராட்டம் ஒன்றையும் நடத்த திட்டமிட்டுள்ளார்.

Leave a Reply