உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் நிலச்சரிவு. 13500 யாத்ரீகர்கள் கதி என்ன?

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் நிலச்சரிவு. 13500 யாத்ரீகர்கள் கதி என்ன?

உத்தரகாண்ட் மாநிலத்தில் இதுவரை இல்லாத வகையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அந்த வழியாக சென்ற பத்ரிநாத் யாத்ரீகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணியில் உத்தரகாண்ட் மாநில போலிசாரும், மீட்புப்படையினர்களும் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் யாத்திரை சென்று வரும் நிலையில் இந்த வருடமும் ஏராளமான யாத்ரீகர்கள் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் யாத்திரை செல்லும் வழியான ரிஷிகேஷ் – பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதியில் உள்ள சாலைகள் சுமார் 60 மீட்டர் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே யாத்ரீகர்களின் பயணம் தடைபட்டுள்ளது. இருப்பினும் யாத்ரீகர்களுக்கு யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

எல்லை சாலைகள் அமைப்பு மற்றும் காவல்துறையினர் நிலமையை சரிசெய்ய முயற்சி செய்து வருகின்றனர். நிலச்சரிவு விரைவில் சரிசெய்யப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்படும் என்று சமோலி காவல்துறை கண்காணிப்பாளர் திரிப்தி பட் தெரிவித்துள்ளார். மேலும் இது மிகப்பெரிய நிலச்சரிவு என்றும் பத்ரிநாத் சாலை சரியாக இரண்டு நாட்கள் ஆகும் என்றும் எல்லை சாலைகள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply