மேலும் ஒரு மேலடுக்கு சுழற்சி. சென்னையில் மழை பெய்யுமா?

மேலும் ஒரு மேலடுக்கு சுழற்சி. சென்னையில் மழை பெய்யுமா?
weather
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்தே இன்னும் பொதுமக்கள் மீளாத நிலையில் கன்னியாகுமரிக்கடல் அருகே மேலும் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதாகவும் அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய  வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

குமரிக்கடல் பகுதியில் சில நாள்களுக்கு முன்பு உருவாகிய மேலடுக்கு சுழற்சி கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து மாலத்தீவு அருகே நிலைகொண்டிருக்கின்றது. இது தற்போது லட்சத்தீவு நோக்கி நகர்ந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  

இந்நிலையில், இலங்கையை ஒட்டியுள்ள குமரிக்கடல் பகுதியில் புதிய மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதாகவும், இதனால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆனால் சென்னையை பொருத்தவரை மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் வானம் மேகம் மூட்டத்துடன் மட்டும் காணப்படும் என்றும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply