வெற்றிகரமாக ஏவப்பட்டது ஜி.எஸ்.எல்.வி. டி-5

இந்தியாவில் தயாரான முக்கிய செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி. டி-5 ஏவுவதற்கான கவுண்ட் டவுன் நேற்று காலை ஆரம்பித்து அதன் கால அளவு 29 மணி நேரம் முடிந்த பின்னர் இன்று மாலை மிகச்சரியாக 4.18 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள தளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. வெண்ணிறப்புகையுடன் வெற்றிகரமாக பாய்ந்து சென்ற செயற்கைக்கோளை ஸ்ரீஹரிகோட்டா விஞ்ஞானிகளும், பொதுமக்களும் பார்த்து மகிழ்ச்சியுடன் ஒருவரை ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

1982 கிலோ எடையுள்ள இந்த ஜி.எஸ்.எல்.வி. ட்-5 என்ற செயற்கைக்கோள் 160 அடி உயரமும், 414 டன் எடையும் கொண்டது. இது வெற்றிகரமாக செலுத்தப்பட்டதால் தகவல் தொடர்பு சேவையின் தரம் மேம்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இன்று ஏவப்பட்ட செயற்கைக்கோள் மிகச்சரியான தனது வட்டப்பாதையை 4.42 மணிக்கு அடைந்ததாக இஸ்ரோ தலைவர் செய்தியாளர்களிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்த வெற்றியை இந்திய மக்களோடு பகிர்ந்து கொள்கிறோம் என்றும் நாட்டிற்கு இந்த செயற்கைக்கோளை அர்ப்பணிப்பதில் மிகவும் பெருமிதம் அடைகிறோம் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply