அமெரிக்காவிலேயே மிக நீளமான கால்களைக் கொண்ட 6 அடி உயர மாடல் அழகி

அமெரிக்காவிலேயே மிக நீளமான கால்களைக் கொண்ட 6 அடி உயர மாடல் அழகி
[carousel ids=”71365,71366,71367,71368″] அமெரிக்காவிலேயே மிக நீளமான கால்களை உடையவர் என்ற பெருமையை பிரபல மாடல் அழகி ஒருவர் பெற்றுள்ளார். இவருடைய கால்கள் மட்டுமே 4 அடி உயரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாடலிங், பேஷன் ஷோ, விளம்பரங்கள் என அமெரிக்காவையே கலக்கி வரும் இளம்பெண் 26 வயதான லோரென் வில்லியம்ஸ். 6 அடி நான்கு அங்குல உயரமுள்ள இவருக்கு கால்கள் மட்டுமே 4 அடி அதாவது 49அங்குலம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் ப்ரூக் பேன்க்கர் என்கிற மாடல் அழகியின் கால்கள் 47 அங்குல உயரம் இருந்ததால் அமெரிக்காவிலேயே மிக நீண்ட கால்களைக் கொண்டவராக பட்டம் சூட்டப்பட்டார். தற்போது இவருடைய பட்டத்தை லோரென் தட்டி பறித்துள்ளார்.

பொதுவாக பேஷன் ஷோ மற்றும் கேட் வாக் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு கால்களின் நீளம் என்பது மிகவும் முக்கியமானது என்பது  அனைவரும் அறிந்ததே. லோரென் நீண்ட கால்களை உடையவர் என்பதால்  இந்தத் துறையில் நிறைய வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. விளையாட்டு, உடற்பயிற்சி, நீச்சல் உடைகள், பேஷன் என அனைத்திலும் இவர் பட்டையை கிளப்பி வருகிறார். ஷூ-க்களின் ராஜாவாக விளங்கும், நைக்கி(Nike) நிறுவனத்தின் ஆஸ்தான மாடலாகவும் லொரென் விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பொழுதுபோக்காக வாலி பால் போட்டிகளில் இவர் விளையாடி வருகிறார்.

https://www.youtube.com/watch?v=87KxPNuxh9s

Leave a Reply