லாவாவின் ஐகான் போன்

icon_2377296f

ஸ்மார்ட் போன்களில் மற்ற அம்சங்களைவிட கேமராவுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கேமராவைச் சிறப்பம்சமாகக் கொண்டு அறிமுகமாகும் போன்களின் வரிசையில் லாவாவின் ஐகான் போன் சேர்ந்திருக்கிறது. மின்வணிக தளமான ஸ்நேப்டீல் மூலம் ரூ.11,990-க்கு விற்பனைக்கு வந்துள்ளது.

இரட்டை சிம் கொண்ட இந்த போன் 2 ஜிபி ரேம், 16 ஜிபி ஸ்டோரேஜ், 5 இன்ச் டிஸ்பிளே ஆகிய அம்சங்களுடன் 13 மெகாபிக்சல் பின்பக்க கேமரா கொண்டுள்ளது.

சோனி எக்ஸ்மார் சென்சார் கொண்ட இந்த கேமரா தவிர 5 மெகாபிக்சல் முன் பக்க கேமராவும் உள்ளது. முதலில் ஆர்டர் செய்த 500 வாடிக்கையாளர்களுக்கு செல்ஃபி ஸ்டிக் இலவசமாக வழங்கப்படும் என்றும் லாவா அறிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டு அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த இயங்குதளமான ஸ்டார் ஓஎஸ் கொண்டுள்ளது. லாவா போன்களுக்கு இந்த விலைப் பிரிவு புதிது என்கின்றனர்.

Leave a Reply