தமிழக சட்டசபையில் நேற்று நீட் தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்ற நிலையில் இந்த மசோதா என்னவாகும் என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு இயற்றப்பட்டிருக்கும் சட்ட மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற வாய்ப்பே இல்லை என்றும் மாணவர்கள் இதனால் குழப்பமடைய வேண்டாம் என்றும் நீட்தேர்வு கண்டிப்பாக வருங்காலத்திலும் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்
மத்திய அரசின் ஆலோசனைகளைக் கேட்டு முடிவெடுக்கும் ஜனாதிபதி கண்டிப்பாக இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டார் என்றும் இந்த மசோதாவால் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்றும் சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்