பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி? கருத்துக்கணிப்பு லீக் ஆனதால் பங்குவர்த்தகத்தில் எழுச்சி.

bse1--621x414தேர்தல் வாக்கெட்டுப்பின்போது எடுக்கப்பட்ட Exit Poll முடிவுகள் சில ஊடகங்களில் இருந்து கசிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும் என தேர்தலின்போது எடுக்கப்பட்ட வாக்கெட்டுப்பு கூறுவதாக நேற்று காலை தகவல்கள் கசிந்ததால் பங்குமார்க்கெட்டில் பயங்கர எழுச்சி தென்பட்டது.

ஒரே நாளில் பங்குவர்த்தகத்தில் சென்செக்ஸ் 650 புள்ளிகள் நேற்று உயர்ந்தது. சில முக்கிய பங்குகளின் மதிப்பு ஒரே நாளில் 5% முதல் 10% வரை உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வாக்கெடுப்பின்போது எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின்படி பாரதிய ஜனதா கட்சிக்கு 230 தொகுதிகள் எளிதில் கிடைக்கும் என்றும், பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க தேவையான 272 தொகுதிகளை எவ்வித சிரமமும் இன்றி பெற்றுவிடும் என்றும் நேற்று காலைமுதல் கசிந்ததாக கூறப்படுகிறது. எனவே நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதியாக அமையும் என்ற தகவலால்தான் நேற்றைய பங்குமார்க்கெட்டின் எழுச்சி தென்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திங்கட்கிழமை மாலை 6மணிக்கு மேல் கருத்துக்கணிப்பை வெளியிடலாம் என தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்துள்ளதால், திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளிலும் பங்குமார்க்கெட்டின் எழுச்சி தொடரும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply