டி.என்.ஏ பற்றி அறிந்து கொள்ளுங்கள்

fda92a6e-d4a9-4dd6-aeb9-30a523937eda_S_secvpf

டி.என்.ஏ. வை பற்றி தெரிந்து கொள்ள, இதோ சில அருமையான தகவல்கள்…

டி. என். ஏ. மற்றும் மரபணுக்களைப் பற்றிய அடிப்படையைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஒரு காலத்தில், ஒருவரின் குணம், திறமை, அறிவு என எல்லாவற்றுக்கும் அவரவர் மூளைதான் காரணம் என்று மேலோட்டமாக சொல்லிக்கொண்டிருந்தோம். அதேபோல ஒருவரின் குணாதிசயம், அறிவு எல்லாம் அவரது சந்ததிக்கு போகும் என்று நம்பப்படுகிறது. உதாரணமாக, ‘அவன் அப்பா மாதிரி மிகக் கோபக்காரன்’, அவள் தாத்தா மாதிரி பயங்கரப் புத்திசாலி’ என சிலர் சொல்வதை பார்த்திருப்போம்.

இந்தக் கூற்றுகளில் உண்மையிருப்பினும், இதன் அடிப்படை இன்னதென்று யாருக்குமே தெரியாது என்பதுதான் நிதர்சனம்.

மரபியலின் அடிப்படை மூலக் கூறுதான் இந்த டி. என். ஏ. ‘டீ. ஒக்சி ரிபோ நியூக்ளிக் எசிட் என்பதுதான் டி. என். ஏ. என்பதன் விரிவாக்கம். ஓர் ஏணியைக் கயிறுபோல முறுக்கினால் உருவாகும் வடிவம் தான் டி. என். ஏ. வின் வடிவம்.

மனித உடலின் ஒவ்வொரு உயிரணுவிலும் டி. என். எ. வால் ஆள குரோமோசோம்கள் என்னும் மரபணுச்சுருள்கள் உண்டு. மனிதனுடைய ஒவ்வொரு உயிரணுவிலும் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை 46. ஒவ்வொரு குரோமோசோமிலும் பல நூறு முதல் பல்லாயிரக்கணக்கான மரபணுக்கள் உண்டு.

இந்த மரபணுக்கள் ஒவ்வொன்றிலும் நமது குணாதிசயங்கள், திறமைகள், நோய்கள் ஏற்படும் வாய்ப்பு, உடல் ஆரோக்கியம் என எல்லாம் இரசாயன குறியீடுகளாகக் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உடலிலுள்ள பல்வேறு இரசாயன சமிக்ஞைகளின் கட்டளையின்படி, தேவையானபோது டி. என். ஏ. விலுள்ள இரசாயனக் குறியீடுகளை புரதங்களாக மாற்றி மொழி பெயர்த்து, உடலின் பல்வேறு செயல்பாடுகளை ஒவ்வொரு உயிரணுவும் மேற்கொள்கின்றன. ஒருவருக்கு குழந்தை பிறக்கும்போதும், இந்த டி. என். ஏ. தாய் தந்தையிடமிருந்து குழந்தைக்குச் செல்கிறது.

இப்படித்தான் ஒருவரது திறமைகள், குணாதிசயங்கள், நோய்கள் என எல்லாம் ஒரு சந்ததியிலிருந்து மற்றொரு சந்ததிக்குக் கடத்தப்படுகின்றன.

பெற்றோரிடமிருந்து குழந்தைக்குச் செல்லும் டி. என். ஏ. வில் இருவிதமான இரசாயன மாற்றங்கள் இருக்கும். ஒன்று, டி. என். ஏ. வின் உட்புறத்திலுள்ள இரசாயன மூலக் கூறுகளில் ஏற்படும் மாற்றங்கள்.

மற்றொன்று டி. என். ஏ. வின் வெளிப் புறத்தில் ஏற்படும் இரசாயன மாற்றங்கள்.

இவ்விரு வகையான இரசாயன மாற்றங்களும் டி. என். ஏ. விலிருந்து உருவாகும் புரதங்களைப் பாதிக்கின்றன. இவ்விரு மாற்றங்களும் மரபணு செயல்பாடுகளைத் ‘தூண்டிவிடுவது’ அல்லது ‘முற்றிலும் தடுப்பது’ என இருவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

அதனால், பெற்றோரிடமிருந்து மரபணுக்கள் குழந்தைக்குச் செல்லும்போது அந்த மரபணுக்களில் ‘மரபணுச் செயல்பாட்டைத் தூண்டிவிடுவது தடுப்பது’ என இரு வகையான இரசாயன மாற்றங்களில் எது இருக்கிறதோ அதுதான் குழந்தைக்குச் செல்லும். ஒருவரது குணாதிசயம் அவரது சந்ததிக்கு மரபியல் அடிப்படையில், டி. என். ஏ. மூலம் எப்படிச் செல்கிறது என்பது தெரிந்திருக்கும்.

Leave a Reply