பிரபல பாடகர் நாகூர் ஹனிபா மரணம். திராவிட இயக்க தலைவர்கள் இரங்கல்

nagore hanifaஇஸ்லாமிய மற்றும் திராவிட இயக்க பாடல்களின் மூலம் ஏராளமானோர் மனதை கொள்ளையடித்த பிரபல பாடகர் நாகூர் ஹனிபா சென்னையில் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 90.

இஸ்லாமிய, திராவிட இயக்கப் பாடல்களை தனது வெண்கலக்குரல் மூலம் பாடி பெரும்புகழ் பெற்றவர் நாகூர் ஹனிபா. பள்ளியில் படிக்கும் வயது முதல் பாடல்களை பாட ஆரம்பித்த நாகூர் ஹனிபா, திருமண வீடுகள், மேடைக்கச்சேரி மற்றும் திராவிட கட்சிகளின் கூட்டம் ஆகியவற்றில் தொடர்ந்து பாடினார்.

கடந்த 65 ஆண்டுகளில் 5000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய நாகூர் ஹனிபா, தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் நேற்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் உடல்நலக் குறைவு காரணமாக நாகூர் ஹனிபாபின் உயிர் பிரிந்தது. அவரது மறைவிற்கு திராவிட இயக்க பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply