முதலிரவு அன்றே குழந்தையின் உயிரை பறித்த கணவன் மீது பிரபல நடிகை ஒருவர் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அயர்லாந்து நாட்டின் புகழ்பெற்ற நடிகை Leigh Arnold, என்பவர். 38 வயதான இவருக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தை பிறந்த முதல்நாள் தனது புதிய குழந்தையுடன் வீட்டுக்கு சந்தோஷமாக வந்துள்ளார். நடிகை Leigh Arnold, அவர்களும் அவரது கணவர் Steve Davies அவர்களும் குழந்தையுடன் இரவில் சோபாவில் தூங்கியுள்ளனர். தூக்கத்தில் குழந்தையின் தந்தையான Steve Davies, தனது கையை குழந்தையின் முகம் மீது போட்டுள்ளார். இதனால் மூச்சு திணறி குழந்தை மரணம் அடைந்துள்ளது.
காலையில் எழுந்து பார்த்த நடிகை தனது கணவரின் கை குழந்தையின் முகம் மீது இருந்ததையும், அதன் காரணமாக குழந்தை மரணம் அடைந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். குழந்தை மரணத்தால் இருவருமே பெரும் சோகத்தில் இருப்பதாலும், குழந்தையின் பிரிவால் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குழந்தையை வீட்டுக்கு அழைத்த வந்த முதல் நாள் இரவிலேயே குழந்தை மரணம் அடைந்தது இருவரது குடும்பதினர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.