ஆட்சியை பிடித்த அடுத்த நாளே லெனின் சிலை அகற்றம்: திரிபுராவில் பரபரப்பு
கடந்த 25 ஆண்டுகளாக திரிபுராவில் ஆட்சி செய்து வந்த மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை வீழ்த்தி பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. திரிபுராவில் கடந்த தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத பாஜக, இந்த முறை ஆட்சியை கைப்பற்றியுள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று இன்னும் பதவியேற்பு விழா கூட நடைபெறவில்லை. அதற்குள் திரிபுராவில் இருந்த லெனின் சிலை நேற்று அகற்றப்பட்டது. இதற்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பும் ஆதரவும் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றது
‘பா.ஜ.க மண்ணில் லெனின் சிலை எதற்கு’ என்று பாஜக ஆதரவாளர்களும், ‘இதுதான் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் உண்மை முகம்’ என்று பாஜக எதிர்ப்பாளர்களும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். பா.ஜ.க தேசிய செயலாளர் எச். ராஜா அவர்களும் தனது சமூகவலைத்தள பக்கத்தில், ‘திரிபுராவில் லெனின் சிலை அகற்றம்’ என்று பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.