லெனோவா நிறுவனம் சீனாவில் அதன் புதிய வைப் எக்ஸ்3 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் வைப் எக்ஸ்3 ஸ்மார்ட்போனை இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வகை CNY 2,499 (சுமார் ரூ.26,000) விலையிலும் மற்றும் யூத் வகை CNY 1,889 (சுமார் ரூ.19,500) விலையிலும் கிடைக்கும். மேலும் நிறுவனம் அதன் உயர்மட்ட வகையான 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வகை CNY 2,999 (சுமார் ரூ.31,000) விலையிலும் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது.
குறிப்பாக அனைத்து வகைகளும் சீனாவில் முன் ஆர்டர் வரிசையில் தற்போது கிடைக்கும். துரதிஷ்டவசமாக சீனாவின் வெளிபகுதிகளில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கக்ககூடிய விவரங்கள் பற்றி நிறுவனம் அறிவிக்கப்படவில்லை.
லெனோவா வைப் எக்ஸ்3 வகைகள் ஒரேமாதிரியான குறிப்புகளை கொண்டுள்ளது. அதாவது, கீரல்களில் இருந்து பாதுகாப்புக்கான கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 மற்றும் 1080×1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.5 இன்ச் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இது ஹைபிரிட் டூயல் சிம்களை கொண்டுள்ளது, அதாவது ஒன்று அல்லது இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்தலாம். இந்த ஸ்மார்ட்போன் வகைகளில் 4ஜி இணைப்பு விருப்பங்களை வழங்குகிறது.
லெனோவா வைப் எக்ஸ்3 மற்றும் லெனோவா வைப் (யூத்) ஆகிய இரண்டு ஸ்மார்ட்போனின் வேறுபாடு ரேம் மற்றும் சேமிப்பு ஆகும். அதாவது, லெனோவா வைப் எக்ஸ்3 ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் உடன் இணைந்து 1.2GHz ஹெக்சாகோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 808 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. மற்றும் லெனோவா வைப் (யூத்) ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் உடன் இணைந்து 1.3GHz அக்டா கோர் மீடியாடெக் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.
மேலும் லெனோவா வைப் எக்ஸ்3 ஸ்மார்ட்போனில் 32ஜிபி மற்றும் 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வகைகளில் வருகிறது. மற்றும் லெனோவா வைப் (யூத்) ஸ்மார்ட்போனில் 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வகைகளில் வருகிறது.
லெனோவா வைப் எக்ஸ்3 ஸ்மார்ட்போனில் சோனி IMX230 சென்சார், எல்இடி ப்ளாஷ், PDAF (ஃபேஸ் டிடெக்ஷன் ஆட்டோஃபோகஸ்), மற்றும் 4K வீடியோ பதிவு ஆதரவு கொண்ட 21 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. லெனோவா வைப் (யூத்) ஸ்மார்ட்போனில் 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.
லெனோவா வைப் எக்ஸ்3 ஸ்மார்ட்போனில் 3600mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. மற்றும் ப்ரொக்ஷிமிட்டி சென்சார், அச்செலேரோமீட்டர், அம்பிஎண்ட் லைட் சென்சார், கைரோஸ்கோப் மற்றும் பாரோமீட்டர் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது. லெனோவா வைப் (யூத்) ஸ்மார்ட்போனில் 3400mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. மற்றும் ப்ரொக்ஷிமிட்டி சென்சார், அச்செலேரோமீட்டர், அம்பிஎண்ட் லைட் சென்சார் மற்றும் கைரோஸ்கோப் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.
லெனோவா வைப் எக்ஸ்3 ஸ்மார்ட்போன் வெள்ளை வண்ணத்தில் கிடைக்கிறது மற்றும் லெனோவா வைப் (யூத்) ஸ்மார்ட்போன் கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் Wi-Fi, ப்ளூடூத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ஜிஎஸ்எம், மைக்ரோ-யூஎஸ்பி, 3ஜி மற்றும் 4ஜி எல்டிஇ ஆகியவை வழங்குகிறது.