ஹிலாரிக்கு கொடுத்த ஆதரவில் இருந்து திடீரென பின்வாங்கிய டைட்டானிக் நடிகர்
டைட்டானிக் பட நாயகனும், பிரபல ஹாலிவுட் நடிகருமான லியோனார்டோ டிகாப்ரியோ, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக பெருந்தொகை ஒன்றை நிதியாக திரட்ட திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது திடீரென அந்த பணியில் இருந்து பின்வாங்கியுள்ளார். இதனால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் லீயோனார்டோவுக்கு சொந்தமான தொண்டு நிறுவனம் மலேசிய ஊழல் மோசடி வழக்கில் சிக்கி இதுதொடர்பாக நீதி விசாரணை நடந்து வருகிறது. இந்த நேரத்தில் நிதி திரட்டினால் தேவையில்லாத பிரச்சனை ஏற்படும் என்பதால் அவர் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக நிதி திரட்டும் முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளதாக ஹாலிவுட் வட்டாரங்களில் இருந்து பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் இதுகுறித்து ஜனநாயக கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறியபோது, “டிகாப்ரியோ தனது ஆவணப் படம் தொடர்பான பணியில் ஈடுபட்டுள்ளார் என்பதுதான் உண்மையான காரணம். ஊழல் வழக்குகளால் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக நிதி திரட்டும் முடிவிலிருந்து டிகாப்ரியோ பின் வாங்கினார் என்பதெல்லாம் வெறும் வதந்திகள்” என்றார்.