எல்ஜி நிறுவனம் உலகின் முதல் 4கே ஓஎல்ஈடி தொலைகாட்சியை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. 55 இன்ச் திரை கொண்ட இந்த தொலைகாட்சியானது இந்தியாவில் ரூ.3,84,900க்கும் 65 இன்ச் திரை கொண்ட மாடல் ரூ.5,79,900க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வளைந்த தொலைகாட்சிகளில் நிறங்களை சிறப்பாக வெளிப்படுத்தும் எல்ஜி நிறுவனத்தின் WRGB தொழில்நுட்பம் கொண்டிருக்கின்றது என்றும் இதன் மூலம் 33 மில்லியன் சப் பிக்ஸல்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. ஓஎல்ஈடி தொலைகாட்சிகளில் 5.9 எம்எம் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
எல்ஜி ஓஎல்ஈடி 4கே தொலைகாட்சியில் கண்ணாடி ஸ்டான்டு மற்றும் 3டி மற்றும் ஹார்மின் கார்டன் சவுன்டு தொழில்நுட்பம் இருக்கின்றது. தொலைகாட்சியுடன் 3டி கண்ணாடிகளும் வழங்கப்படுகின்றது.
இந்த தொலைகாட்சி வெப் ஓஎஸ் ஸ்மார்ட் டிவி இயங்குதளம் மற்றும் எல்ஜி மேஜிக் மோஷன் ரிமோட் கொண்டிருப்பதோடு வாய்ஸ் ரெக்ஃனீஷன் சப்போர்ட் மற்றும் வை-பை, மிராகாஸ்ட், எம்எச்எல் மற்றும் இன்டெல் WiDi வழங்கப்பட்டுள்ளது.