பெரிய பெரிய வடிவங்களில் இருந்த டிவி பெட்டிகள் தற்போது எல்.ஈ.டி டிவிகளாக சுவரில் ஆணியடித்து மாட்டும் அளவுக்கு மிக எளிதாகிவிட்டது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்நிலையில் தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சி காரணமாக தற்போது வால்பேப்பர் அளவில் டிவி ஒன்றை எல்.ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய டிவியின் மொத்த எடை 1.9கிலோதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேக்னட் மூலம் இது சுவரில் எளிதாக வால்பேப்பர் போல ஒட்டிக்கொள்ளும், வீடு மாற்றும் சமயத்தில் இந்த டிவியை பாய்போல சுருட்டி எடுத்து செல்லலாம்
இந்த புதிய டிவி ஜூலை அல்லது ஆகஸ்ட் முதல் பொதுமக்கள் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்படும் என்றும் இந்த டிவி 55இன்ச், 66 இன்ச், மற்றும் 77 இன்ச் என மூன்று வகையாக விற்பனை செய்யப்படும் என்றும் எல்ஜி தொழில்நுட்ப பிரிவி விற்பனை அதிகாரி சேங் டியோக் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இந்த டிவியின் விலை சுமார் $9,000 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.