தமிழ்நாட்டில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலம் மாணவர்கள் அரசு பள்ளிகளுக்கு வராமல் தனியார் பள்ளிகளுக்கு செல்ல அரசே வழிகாட்டுகிறது.
இந்த வகுப்புகளை நடத்துவதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை சரி செய்து, மழலையர் வகுப்புகளை தொடர்ந்து நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.