தமிழகத்தில் 2,381 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்குள் பரிசோதனை அடிப்படையில் L.K.G., U.K.G., வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன.
L.K.G., U.K.G., வகுப்புகளை அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து நடத்திட வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்று முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் அரசுப் பள்ளிகளில் L.K.G., U.K.G., வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கென தகுதியான சிறப்பு ஆசிரியர்கள் தேவையான இடங்களில் விரைவில் நியமிக்கப்படுவர் என பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் குறிப்பிட்டுள்ளார்.