லிபியாவில் கடாபி மகன் உள்பட 3 பேருக்கு மரண தண்டனை. பெரும் பரபரப்பு

லிபியாவில் கடாபி மகன் உள்பட 3 பேருக்கு மரண தண்டனை. பெரும் பரபரப்பு

gadaffiலிபியா நாட்டில் சர்வாதிகாரியாக திகழ்ந்த கடாபியின் மகன் சயீப் அல்-இஸ்லாம் என்பவருக்கு லிபியா நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது. இவர் போர்க்குற்றம் செய்தது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் இந்த தண்டனை வழங்கியுள்ளதாக நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

லிபியாவில் கடந்த 1969ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரி சர்வாதிகாரியாக இருந்து அந்நாட்டை ஆட்சி செய்தவர் கடாபி. கடந்த 2011ஆம் ஆண்டு கிளர்ச்சிப்படையினரால் நடத்தப்பட்ட புரட்சியால் இவர் பதவியில் இருந்து இறக்கப்பட்டார். இதனை அடுத்து அவரை புரட்சிப்படையினர் சுட்டுக்கொன்றனர்.

இந்நிலையில் கடாபியின் மகன் சயீப் அல் இஸ்லாம் அப்பாவி மக்களை போர் என்ற பெயரில் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது லிபியா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த லிபியா நீதிமன்றம் கடாபியின் மகன் மற்றும், கடாபியின் உளவுத்துறை தலைவராக செயல்பட்ட அப்துல்லா அல்-செனுசி, முன்னாள் பிரதமர் பக்தாதி அல்-மஹ்மூதி ஆகியோருக்கு இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு காரணமாக லிபியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply