நடப்பு 2014-15 நிதி ஆண்டில் ரூ.33,000 கோடிக்கு மொத்த வர்த்தகம் மேற்கொள்ள எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் இலக்கு நிர்ணயித்துள்ளது. இது, சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது 22 சதவிகித வளர்ச்சியாக இருக்கும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்ற நிதி ஆண்டில் இந்த நிறுவனம் ரூ.27,000 கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளது. அந்த ஆண்டில் வழங்கிய வீட்டுக் கடன் 18% அதிகரித்துள்ளது.
எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான சுனிதா சர்மா, “2014-15 ஆம் நிதி ஆண்டில் ரியல் எஸ்டேட் துறைக்கான கடன் வேகம் எடுத்துள்ளது. இதனையடுத்து, கடன் வளர்ச்சி இலக்கு 20 சதவிகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீட்டுக் கடன் வாங்குவோரில் 85 சதவிவிதத்தினர் நடுத்தர வருமான பிரிவினர். எல்ஐசி வணிகத்தில் குறைந்த விலை வீடுகள் 95 சதவிகித பங்கினைக் கொண்டுள்ளன” என்றார். சென்னையில் நடந்த எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் -ன் உங்கள் இல்லம் 2014 – சொத்துக் கண்காட்சியை திறந்து வைத்த போது இந்தக் கருத்தை சுனிதா சர்மா தெரிவித்தார்.