கேரள சட்டசபை கட்டிடத்தில் காலை வழக்கம்போல் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இதில் முதலமைச்சர் உம்மன் சாண்டி உள்பட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கிய உடன் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் சபை ஒத்திவைக்கப்பட்டது.
இதன்பின் சட்டசபையின் முதல் மாடியில் இருந்து லிப்ட் வழியாக அமைச்சர்கள் குஞ்ஞாலி குட்டி, இப்ராஹீம் குஞ்ச் மற்றும் அனு ஜேக்கப் ஆகியோர் தரை தளத்திற்கு இறங்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென லிப்ட் அறுந்து, வேகமாக தரை தளத்தை தாண்டி கீழ் தளத்தில் மோதி நின்றது. இதில் 3 அமைச்சர்களும் காயம் அடைந்தனர். உடனடியாக அங்கேயே அமைச்சர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் கேரள சட்டப் பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.