ரஷ்யாவில் லிங்க்ட்-இன் சமூக இணையதளம் திடீர்தடை.

ரஷ்யாவில் லிங்க்ட்-இன் சமூக இணையதளம் திடீர்தடை.
linkedin
ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்கள் பொழுதுபோக்கு மற்றும் செய்திகள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும் நிலையில் லிங்க்ட் இன் என்ற சமூக வலைத்தளம் தொழில்முறை சமூக வலைத்தளத்தின் நம்பர் ஒன் ஆக இருந்து வந்தது. ஆனால் இந்த சமூக வலைத்தளத்தின் மூலம் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வெளிவந்துள்ள குற்றச்சாட்டை அடுத்து லிங்க்ட் இன் இணையதளத்தை ரஷ்யா முடக்கியுள்ளது. இந்த தகவலை ரஷ்யாவின் தொலைத்தொடர்பு கண்காணிப்பு அமைப்பு நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த உத்தரவை அடுத்து லிங்க்ட் இன் இணையதளத்தை முடக்க, அனைத்து இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் ரஷ்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, ரஷ்யாவில் உள்ள பல மில்லியன் கணக்கான லிங்க்ட் இன் பயன்பாட்டாளர்களை அந்த நிறுவனம் இழந்துள்ளது.

இதனிடையே, ரஷ்யாவில் லிங்க்ட் இன் இணையதளத்தை மீண்டும் இயங்கவைக்க அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக லிங்க்ட் இன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply