பீகாரை அடுத்து மத்திய பிரதேசத்திலும் மதுவிலக்கு. தமிழ்நாட்டில் எப்போது?

பீகாரை அடுத்து மத்திய பிரதேசத்திலும் மதுவிலக்கு. தமிழ்நாட்டில் எப்போது?

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கடந்த பல வருடங்களாக அதிமுக தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் போராடி வரும் நிலையில் இந்தியாவில் உள்ள முக்கிய மாநிலங்களில் மதுவிலக்கை அமல்படுத்தி வருகின்றன

சமீபத்தில் பீகார் மாநிலத்தில் மதுவிலக்கை அமல்படுத்தியதால் அம்மாநில மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் தற்போது மத்திய பிரதேச அரசும் மதுவிலக்கை அறிவித்துள்ளது.

நேற்று  நர்மதா ஆற்றின் கரையில் நர்மதா சேவா யாத்ரா என்ற திட்டத்தின் கீழ் நடைபெற்ற ‘மகா ஆரத்தி’ நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் பேசியதாவது:

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மத்தியப் பிரதேசத்தில் மதுவிலக்கு நடைமுறைக்கு வரும். முதல்கட்டமாக நர்மதா ஆற்றின் கரையிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும் என்று அதிரடியக அறிவித்தார்.

Leave a Reply