தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது. பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களை இன்று தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
1. திருவள்ளூர் (தனி) – ஸ்ரீ ராம் வித்யாமந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி.
2. வட சென்னை – ராணி மேரி கல்லூரி.
3. தென் சென்னை – அண்ணா பல்கலைக்கழகம்
4. மத்திய சென்னை – லயோலா கல்லூரி
5. ஸ்ரீபெரும்புதூர் – ஜே.ஜே. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (இதே இடத்தில் ஆலந்தூர் தொகுதி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது)
6. காஞ்சிபுரம் (தனி) – அரசு உயர்நிலைப்பள்ளி, திருப்புக்குழி.
7. அரக்கோணம் – ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரி மற்றும் ராணிப்பேட்டை பாலிடெக்னிக் கல்லூரி
8. வேலூர் – ஈ.வெ.ரா. தந்தை பெரியார் அரசு தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் மற்றும் ஈ.வெ.ரா. தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி.
9. கிருஷ்ணகிரி – அரசு பாலிடெக்னிக் கட்டடம், சென்னை சாலை.
10. தருமபுரி – தருமபுரி அரசு கலைக் கல்லூரி
11. திருவண்ணாமலை – ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்,
12. ஆரணி – சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி, செங்கம் சாலை
13. விழுப்புரம் (தனி) – அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
14. கள்ளக்குறிச்சி – ஏ.கே.டி. பொறியியல் கல்லூரி.
15. சேலம் – அரசு பொறியியல் கல்லூரி.
16. நாமக்கல் – விவேகானந்தா பெண்கள் பொறியியல் கல்லூரி.
17. ஈரோடு – சாலை மற்றும் போக்குவரத்து தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஆர்டிடி)
18. திருப்பூர் – எல்.ஆர்.ஜி. அரசு பெண்கள் கலைக் கல்லூரி.
19. நீலகிரி (தனி) – அரசு பாலிடெக்னிக் கல்லூரி, உதகை
20. கோவை – அரசு தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஜி.சி.டி.,)
21. பொள்ளாச்சி – டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி.
22. திண்டுக்கல் – அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி.
23. கரூர் – எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி
24. திருச்சி – சாரநாதன் பொறியியல் கல்லூரி.
25. பெரம்பலூர் – தனலட்சுமி ஸ்ரீனிவாசன் நர்சிங் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி.
26. கடலூர் – பெரியார் அரசு கலைக் கல்லூரி.
27. சிதம்பரம் (தனி) – மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
28. மயிலாடுதுறை – ஏ.வி.சி. பாலிடெக்னிக் கல்லூரி.
29. நாகப்பட்டினம் (தனி) – திரு.வி.க. அரசு கல்லூரி.
30. தஞ்சாவூர் – குந்தவை நாச்சியார் அரசு பெண்கள் கலைக் கல்லூரி.
31. சிவகங்கை – அழகப்பா செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி-பாலிடெக்னிக்.
32. மதுரை – மதுரை மருத்துவக் கல்லூரி.
33. தேனி – தேனி கம்மவார் சங்க பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரி.
34. விருதுநகர் – எஸ். வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி வி.எச்.என். செந்தில்குமார் நாடார் கல்லூரி.
35. ராமநாதபுரம் – அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி.
36. தூத்துக்குடி – அரசு பாலிடெக்னிக் கல்லூரி.
37. தென்காசி (தனி) – ஸ்ரீ பராசக்தி பெண்கள் கல்லூரி.
38. திருநெல்வேலி – அரசு பொறியியல் கல்லூரி.
39. கன்னியாகுமரி – அரசு பாலிடெக்னிக் கல்லூரி.
மேற்படி 39 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் வரும் மே மாதம் 16ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அதுவரை இந்த மையங்களில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் இரவுபகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.