அத்வானியின் இணையதளத்தை முடக்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் முயற்சி.

 advaniபாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் இணையதளத்தினை முடக்க மர்ம நபர்கள் சிலர் கைவரிசை காட்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் அத்வானியின் இணையதளத்தை முடக்க நடந்த இரண்டாவது முயற்சி இது என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அத்வானியின் இணையதளத்தை முடக்க சதி நடந்தது. ஆனால் அவருடைய இணையதளம் ஹேக்கர்களால் முடக்க முடியாத அளவிற்கு சிறப்பு தொழில்நுட்பம் வாய்ந்ததாக அமைந்ததால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் ஒருசில மர்ம நபர்கள் அவருடைய இணையதளத்தை முடக்க சதி செய்துள்ளனர். இம்முறையும் அவர்களால் இணையதளத்தை முடக்க முடியவில்லை. இருப்பினும் அத்வானியின் இணையதளத்தை முடக்க முயற்சிக்கும் கும்பலை பிடிக்க டெல்லி போலீசார் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் காஷ்மீர் தீவிரவாதிகளின் சதி என்று முதல்கட்ட விசாரணையில் கண்டுபிடித்துள்ள டெல்லி போலீஸார் இதுகுறித்து மேலும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply