பெர்சனல் லோன் வேண்டுமா? ஏடிஎம் மிஷினே தருகிறது

பெர்சனல் லோன் வேண்டுமா? ஏடிஎம் மிஷினே தருகிறது

பெர்சனல் லோன் வாங்க இனி வங்கிக்கு சென்று விண்ணப்பிக்க தேவையில்லை. ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் மிஷினிலேயே இதற்கான விண்ணப்பத்தை தருகிறது. ஏடிஎம் மெஷின்களிலேயே தனிநபர் கடனுக்கான விண்ணப்பத்தில் கேட்கப்படும் விவரங்களைப் பதிவு செய்து, வெற்றிகரமாக அந்த பரிவர்த்தனையை முடித்தால், உங்களுடைய கடன் தொகை உங்கள் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும்.

அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை தனிநபர் கடன் இதன் மூலம் பெறலாம். ஆனால் அதற்கு முன்னர் இந்த கடனுக்கு எவ்வளவு வட்டி விகிதம், எவ்வளவு புராசஸிங் கட்டணம் போன்ற விவரங்கள், ஏடிஎம் மெஷின் திரையில் காண்பிக்கப்படும். இந்த பரிவர்த்தனையின்போது அனைத்து விவரங்களையும் தெளிவாகப் படித்து, கடன் தேவைப்படுவர்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.

 

Leave a Reply