நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர்கள் இவ்வளவுதான் செலவு செய்ய வேண்டும்

tamilnadu election commsion

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்றும் பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்யலாம் என்பதை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தகவல்களை தற்போது பார்ப்போம்.

* பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சம் ரூ.17,000 வரை செலவு செய்யலாம்.

* முதல் மற்றும் 2-ம் நிலை நகராட்சிகளில் வேட்பாளர்கள் அதிகபட்சம் ரூ.34,000 வரை செலவு செய்யலாம்.

* தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை நகராட்சிகளில் வேட்பாளர்கள் ரூ.85,000 வரை செலவு செய்யலாம்.

* மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் ரூ.85,000 வரை செலவு செய்யலாம்.

* சென்னை பெருநகர மாநகராட்சியில் மட்டும் வேட்பாளர் ரூ.90,000 வரை செலவு செய்யலாம்.

தேர்தல் செலவின கணக்குகளை பிப்.22-ம் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும்.