3வது கட்ட ஊரடங்கில் விதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்

வீடுகளிலேயே தங்க வேண்டும்‌

தமிழகம் உள்பட நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய அம்சங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. அவை பின்வருவன:

இரவு 7 மணி முதல்‌ காலை 7 மணி வரை எந்த நடமாட்டத்துக்கும்‌ அனுமதி இல்லை

65 வயதுக்கு மேற்பட்டோர்‌, கர்ப்பிணிகள்‌, மாற்றுத்‌ திறனாளிகள்‌, 10 வயதுக்குட்பட்டோர்‌ வீடுகளிலேயே தங்க வேண்டும்‌

அத்தியாவசிய தேவை ஏற்பட்டால்‌ ஒழிய அல்லது உடம்பு சரியில்லாமல்‌ போனால்‌ மட்டுமே வெளியே வர அனுமதி

சிவப்பு மண்டலங்களில்‌ கண்டெய்ன்மென்ட்‌ ஸோன்களுக்கு வெளியே சைக்கிள்‌ ரிக்சா, ஆட்டோக்களுக்கு தடை

சிவப்பு மண்டலங்களில்‌ கண்டெய்ன்மென்ட்‌ ஸோன்களுக்கு வெளியே டாக்சி, கேப்கள்‌ ஓட்டக்‌ கூடாது

சிவப்பு மண்டலங்களில்‌ கண்டெய்ன்மென்ட்‌ ஸோன்களுக்கு வெளியே மாவட்டங்களுக்கு இடையிலான பஸ்களை இயக்க தடை

சிவப்பு மண்டலங்களில்‌ கண்டெய்ன்மென்ட்‌ ஸோன்களுக்கு வெளியே சலூன்கள்‌, ஸ்பா இயங்க தடை

பசுமை மண்டலங்களில்‌ பொதுப்‌ போக்குவரத்தை 50 சதவீத இருக்கைகளுடன்‌ மேற்கொள்ளலாம்‌

அனைத்து வகையான சரக்குப்‌ போக்குவரத்தும்‌ தங்கு தடையின்றி நடைபெறலாம்‌

Leave a Reply