பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாரதிய ஜனதா பொறுப்பேற்றவுடன் இன்று முதல்முறையாக நாடாளுமன்றம் கூடியது. ஆனால் காங்கிரஸ் கட்சியினரின் கடும் அமளியால் நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 10 மணீக்கு கூடியதும் கூடியதும், விலைவாசி உயர்வு குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் கோஷம் போட்டனர். காங்கிரஸ் உறுப்பினர்களின் தொடர் கோஷத்தால் பாராளுமன்ற நடவடிக்கைகள் பெருமளவு பாதிக்கப்பட்டது.இதனால், பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார்.
அவை மிண்டும் 12 மணிக்கு கூடினாலும் விலைவாசி பிரச்சனை, எதிர்க்கட்சி தலைவர் பிரச்சனை போன்றவற்றிற்கு முடிவு காணாமல் பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்தவிட மாட்டோம் என காங்கிரஸார் நாடாளுமன்ற வளாகத்தில் கூறி வருவதால் இன்றைய நாடாளுமன்றக்கூட்டம் பாதிப்பின்றி நடைபெறுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.