சம்பள உயர்வுக்கு பின் நீதிபதிகளின் சம்பளம் எவ்வளவாக இருக்கும?

சம்பள உயர்வுக்கு பின் நீதிபதிகளின் சம்பளம் எவ்வளவாக இருக்கும?

நீதிபதிகள் சம்பள உயர்வு மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதால் நீதிபதிகளின் சம்பள உயர்வு உறுதியாகியுள்ளது

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான, 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் கடந்த 2016 ஜனவரி 1 முதல் மத்திய அரசு அமல்படுத்தியது. இந்த சூழலில் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஊதிய உயர்வு குறித்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது. அதன்படி,

உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2.80 லட்சமாக சம்பளம் இருக்கும். அதேபோல் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ரூ.90,000ல் இருந்து ரூ.2.25 லட்சமாக சம்பளம் உயரும்

இந்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அதனால் வரும் 30ஆம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடரில் மசோதா நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply