லண்டன் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் அடையாளம் கண்டுபிடிப்பு
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சமீபத்தில் பாலம், பாரோ மார்க்கெட், வாக்ஸ்ஹால் ஆகிய பகுதிகளில் அப்பாவி பொதுமக்கள் மீது மூன்று தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 48 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ அமைப்பு பொறுப்பேற்று கொண்ட நிலையில் தற்போது தாக்குதல் நடத்திய மூன்று தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களில் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒருவன் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த குராம் சாஷத் பட், இன்னொருவன் ரிச்சர்ட் ரெடவுனே என்ற லிபியா நாட்டை சேர்ந்தவன் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் குராம் சாஷத் பட் என்பவன் பாகிஸ்தானில் பிறந்த இங்கிலாந்து வளர்ந்து, அந்நாட்டு குடியுரிமை பெற்று லண்டனில் வசித்து வந்திருக்கிறான். அந்நாட்டில் ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு பற்றி ரகசிய பிரச்சாரமும் செய்திருக்கிறான்.
சுட்டு கொல்லப்பட்ட மூன்றாவது தீவிரவாதி யார் என்பதை கண்டுபிடிக்கும் பணி நடந்து வருவதாக இங்கிலாந்து போலீசார் தெரிவித்தனர்,