லண்டன் மாணவர்களின் வாழ்க்கையை ஒரே வருடத்தில் மாற்றிய பிரபல வழக்கறிஞர்
ஒரு வழக்கிற்கு லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிய லண்டனை சேர்ந்த வழக்கறிஞர் இஸ்மாயில் என்பவர் தனது வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு மாணவர்களின் எதிர்காலத்தை முன்னிட்டு ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராக மாறினார். மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்த அந்த பள்ளியை தனது நிர்வாக திறனால் ஒரே வருடத்தில் முற்றிலும் மாற்றி அமைத்து பல அடிப்படை வசதிகளை செய்ய நடவடிக்கை எடுத்தார்.
இவருடைய அதிரடி நடவடிக்கை காரணமாக அந்த பள்ளியில் இருந்து இந்த ஆண்டு வெளியேறிய 200 மாணவர்களில் 190 மாணவர்களுக்கு உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் இடம் கிடைத்துள்ளது. இந்த மாணவர்களில் ஒன்பது பேர்களுக்கு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும், ஒருவருக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் இடம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு மிகப்பெரிய வழக்கறிஞர் என்று கூறிக்கொள்வதை விட மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றியமைத்த தலைமை ஆசிரியர் என்று கூறிக்கொள்வதில் தான் பெருமை அடைவதாக இஸ்மாயில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.